தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

டெல்லியில் விவசாயிகள் தாக்குதல்: சிஐடியு ஆர்பாட்டம் - சிஐடியு ஆர்பாட்டம்

கன்னியாகுமரி: டெல்லியில் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் விவசாயிகள் மீது தாக்குதல் நடத்தி வரும் பாஜக அரசை கண்டித்து நாகர்கோவிலில் சிஐடியு சார்பாக ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

CITU
CITU

By

Published : Nov 30, 2020, 1:18 PM IST

மத்திய அரசு அண்மையில் புதிய வேளாண் சட்டத்திருத்த மசோதாவை அமல்படுத்தியது. இது விவசாயிகளுக்கு ஆதரவான சட்டம் என மத்திய அரசு தரப்பில் கூறப்பட்டு வருகிறது.

இந்நிலையில் இந்த சட்டம் விவசாயிகளுக்கு எதிரானதாகவும், கார்ப்பரேட்டுகளுக்கு ஆதரவாகவும் இருப்பதாக குற்றஞ்சாட்டி இந்த சட்டத்திருத்தத்தை திரும்பப் பெற வலியுறுத்தி நாடு முழுவதும் எதிர்க்கட்சிகள், விவசாய அமைப்பினர் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

அதன்படி கடந்த சில தினங்களாக தலைநகர் டெல்லியில் விவசாயிகள் பேரணி மற்றும் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். அதனை தடுக்கும் வகையிலும் அடக்கும் நோக்கிலும் விவசாயிகள் மீது காவல் துறையினர் தடியடி நடத்தினர்.

இதற்கு கண்டனம் தெரிவித்தும் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்தும் நாகர்கோவிலில் சிஐடியு சார்பாக ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டவர்கள் மத்திய அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர்.

ABOUT THE AUTHOR

...view details