தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

சிஏஏவை எதிர்த்து செல்போன் விளக்குகளை ஒளிரச்செய்து போராட்டம்!

குமரி: நாகர்கோவில் அருகே அண்ணா ஸ்டேடியம் முன்பு நேஷனல் விமன்ஸ் ஃப்ரண்ட் சார்பில் குடியுரிமை பாதுகாப்பு பெண்கள் மாநாடு நடைபெற்றது. இதில் திரளான பெண்கள் கலந்து கொண்டனர்.

citizenship-amendment-act-the-public-struggle-with-flashing-cell-phone-lights
citizenship-amendment-act-the-public-struggle-with-flashing-cell-phone-lights

By

Published : Mar 15, 2020, 6:54 AM IST

மத்திய அரசு கொண்டுவந்துள்ள குடியுரிமை சட்டத்திற்கு (சிஏஏ) எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் பல்வேறு கட்ட போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. குமரி மாவட்டத்திலும் இச்சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து அரசியல் கட்சிகளும், தொண்டு நிறுவனங்களும் போராட்டங்கள் நடத்தி வருகின்றன.

இந்நிலையில், குமரி மாவட்டம் நாகர்கோவிலில் உள்ள அண்ணா விளையாட்டு அரங்கம் முன்பு நேஷனல் விமன்ஸ் ஃப்ரண்ட் அமைப்பு சார்பில் குடியுரிமை பாதுகாப்பு பெண்கள் மாநாடு நடைபெற்றது. இதில் அந்த அமைப்பின் மாவட்ட தலைவர் உம்மு ஹபீபா தலைமை தாங்கினார்.

செல்போன் விளக்குகளை ஒளிரச்செய்து பொதுமக்கள் போராட்டம்

இந்த போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் செல்போனில் உள்ள விளக்குகளை ஒளிரச் செய்தபடி மத்திய அரசுக்கு எதிராகவும், குடியுரிமைச் சட்டத்தை திரும்பப் பெற வலியுறுத்தியும் பாட்டுபாடி எதிர்ப்பு தெரிவித்தனர்.

இதையும் படிங்க:தொற்றுநோய் பட்டியலில் கொரோனா சேர்ப்பு: தமிழ்நாடு அரசிதழில் வெளியீடு

ABOUT THE AUTHOR

...view details