தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தூய்மைப் பணியாளர்களுக்கு நிவாரணப் பொருள்கள் வழங்கிய இயக்குநர்! - கன்னியாகுமரி மாவட்ட செய்திகள்

கன்னியாகுமரி: பொட்டல் குளம் பகுதியில் உள்ள தூய்மைப் பணியாளர்களுக்கு இயக்குநர் பி.டி. செல்வகுமார் நிவாரணப் பொருள்கள் வழங்கினார்.

தூய்மைப் பணியாளர்கள்
தூய்மைப் பணியாளர்கள்

By

Published : Jul 13, 2020, 3:48 PM IST

கரோனா ஊரடங்கு தொடங்கிய நாள் முதல் பல்வேறு அரசியல் கட்சிகள், தனியார் தொண்டு நிறுவனங்கள் சார்பில் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட ஏழை, எளிய பொதுமக்களுக்கு நிவாரணப் பொருள்கள் வழங்கப்பட்டுவருகின்றன.

அந்த வகையில், பிரபல திரைப்பட இயக்குநரும், கலப்பை மக்கள் கட்சியின் நிறுவனருமான பி.டி. செல்வகுமார் சார்பில் கடந்த 70 நாள்களாக தொடர்ச்சியாக பொதுமக்களுக்கு நிவாரண உதவிகள் வழங்கப்பட்டுவருகின்றன. இந்நிலையில், இன்று குமரி மாவட்டம் பொட்டல் குளம் பகுதியில் உள்ள தூய்மைப் பணியாளர்களுக்கு நிவாரணப் பொருள்கள் வழங்கப்பட்டுள்ளன.

இந்நிகழ்வில் திரைப்பட இயக்குநர் பி.டி. செல்வகுமார் கலந்துகொண்டு, சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட தூய்மைப் பணியாளர்களுக்கு அரிசி, காய்கறி உள்ளிட்ட நிவாரணப் பொருள்களை வழங்கினார்.

ABOUT THE AUTHOR

...view details