தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கிறிஸ்துமஸ் பண்டிகை: தோவாளை சிறப்பு மலர் சந்தை தொடக்கம்!

கன்னியாகுமரி: கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி தோவாளை சிறப்பு மலர் சந்தை தொடங்கியது. மலர்கள் விற்பனையும் சூடு பிடித்து உள்ளது. இதனை தொடர்ந்து பூக்கள் விலையும் அதிகரித்துள்ளன.

தோவாளை சிறப்பு மலர் சந்தை தொடக்கம்
தோவாளை சிறப்பு மலர் சந்தை தொடக்கம்

By

Published : Dec 24, 2020, 4:33 PM IST

கிறிஸ்துமஸ் பண்டிகை நாளைய தினம் கொண்டாடப்படுவதால், பூக்களின் பயன்பாடு அதிகளவு காணப்படும்.

இந்நிலையில், தோவாளை மலர் சந்தையில் சிறப்பு மலர் சந்தை இன்று (டிச.24) தொடங்கியுள்ளது. இதையடுத்து, இங்கு மலர்கள் விற்பனை சூடு பிடித்துள்ளன.

பிச்சி, மல்லி, சம்பங்கி, ரோஜா, அரளி, தாமரை, வாடாமல்லி, கிரேந்தி, கோழிக்கொண்டை உள்பட பல்வேறு வகையான பூக்கள் விற்பனை அதிகரித்து உள்ளது. மேலும் பண்டிகை காலம் என்பதால் தோவாளை மலர் சந்தையானது களை கட்டி உள்ளது.

அதுபோல பூக்களின் விலை அதிகரித்துள்ளதால், ஒரு கிலோ மல்லி 4 ஆயிரம் ரூபாயாகவும், பிச்சி பூ 2500 ரூபாயாகவும், சம்பங்கி 250 ரூபாயாகவும், அரளி 250 ரூபாயாகவும், தாமரை பூ ஒன்று 10 ரூபாயாகவும் விற்பனை செய்யப்படுகிறது.

பனி பொழிவால் பூக்கள் வரத்து குறைந்து காணப்படுவதால், பூக்களின் விலையில் உயர்வு ஏற்பட்டு இருப்பதாக வியாபாரிகள் தெரிவித்து உள்ளனர். பூக்களின் இந்த திடீர் விலை உயர்வால் பூ வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.

இதையும் படிங்க:கடும் பனிப்பொழிவு எதிரொலி : கிடுகிடுவென உயர்ந்த பூக்கள் விலை

ABOUT THE AUTHOR

...view details