தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

குமரி கோட்டார் சவேரியார் பேராலயத்தில் குறுத்தோலை பவனி - குறுத்தோலை ஞாயிறு பவனி

கன்னியாகுமரி: கிறிஸ்தவ ஆலயங்களில் ஆசீர்வதிக்கப்பட்ட குருத்தோலைகளை கிறிஸ்தவர்கள் கைகளில் ஏந்தியபடி குருத்தோலை ஞாயிறான இன்று (மார்ச். 28) கோட்டார் சவேரியார் பேராலயத்தில் குறுத்தோலை பவனி நடைபெற்றது.

குமரி கோட்டார் சவேரியார் பேராலயத்தில் குறுத்தோலை பவனி
குமரி கோட்டார் சவேரியார் பேராலயத்தில் குறுத்தோலை பவனி

By

Published : Mar 28, 2021, 12:07 PM IST

கிறிஸ்தவர்களின் முக்கியப் பண்டிகைகளில் ஒன்றான ஈஸ்டர் பெருவிழா ஏப்ரல் மாதம் 4ஆம் தேதி உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது.

இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்டு இறப்பதற்கு சில நாள்களுக்கு முன்பு, அவரை ஒரு கழுதைக் குட்டியின் மேல் அமர்த்தி, ஜெருசலேம் நகர வீதிகள் வழியாக ஊர்வலமாக அழைத்துச் சென்றனர்.

அப்போது அங்கு நின்ற மக்கள் ஒலிவ மரக்கிளைகளை கைகளில் ஏந்தியபடி, 'தாவீதின் குமாரனுக்கு ஓசன்னா, உன்னதங்களில் ஓசன்னா' என்று பாடி மகிழ்ந்தனர். இந்த நிகழ்ச்சியை நினைவுகூரும் வகையில் கிறிஸ்தவர்கள் இந்நாளை குருத்தோலை திருநாளாக கொண்டாடுகிறார்கள்.

தற்போது கரோனா பெருந்தொற்று இரண்டாம் அலை பரவி வருவதையொட்டி, ரோமன் கத்தோலிக்க திருச்சபைகள், சி.எஸ்.ஐ. திருச்சபைகள், பெந்தேகோஸ்து, மெத்தஸ்டிங்ட், ஆர்க்காடு லூத்தரன் போன்ற ஆலயங்களில் குருத்தோலை ஞாயிறு பவனி செல்லும் நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவித்திருந்தனர்.

மேலும் ஆலயத்துக்குள்ளே இந்த நிகழ்ச்சியை எளிமையாக நடத்தி முடிக்க தலைமை போதகர்களிடமிருந்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டதை அடுத்து, இன்று காலை கோட்டார் சவேரியார் ஆலயத்தில் ஆசீர்வதிக்கப்பட்ட குருத்தோலைகள் வழங்கப்பட்டு, அவற்றை கிறிஸ்தவர்கள் கைகளில் ஏந்தியபடி ஆலயத்தினுள் ஓசன்னா பாடல் பாடி பவனியாக வந்தனர். இதைத்தொடர்ந்து ஆலயங்களில் திருப்பலி, சிறப்பு வழிபாடுகள் கோட்டார் மறை மாவட்ட ஆயர். நசிரேன் சூசை தலைமையில் நடைபெற்றது.

இதையும் படிங்க:வேளாங்கண்ணியில் விமரிசையாக நடைபெற்ற குருத்தோலை ஞாயிறு பவனி!

ABOUT THE AUTHOR

...view details