கன்னியாகுமரி மாவட்டம் ஆரல்வாய்மொழி அருகே சந்தைவிளை பகுதியை சேர்ந்த சடையன் - தேவி தம்பதியின் மகள் வீரம்மா(3). சடையனும், தேவியும் நாகர்கோவில் மாநகராட்சியில் துப்புரவு பணியாளராக வேலை பார்த்து வருகின்றனர்.
மூன்று வயது குழந்தையை கடத்தியவர் கைது! - கடத்தியவர் கைது
கன்னியாகுமரி: 3 வயது பெண் குழந்தையை கடத்தியவர் வள்ளியூரில் கைது, குழந்தை மீட்கப்பட்டது.
இவர்கள் தங்களின் மூன்று வயது மகள் வீரம்மாவுடன் நாகர்கோவில் அண்ணா பஸ் நிலையத்தில் தூங்கிக் கொண்டிருந்தனர். அதிகாலையில் பார்த்தபோது குழந்தையை காணவில்லை. குழந்தையை பல இடங்களில் தேடியும் கிடைக்காததால், குழந்தை கடத்தப்பட்டிருக்கலாம் என்று எண்ணியுள்ளனர்.
இதையடுத்து கோட்டார் காவல் நிலையத்தில் தம்பதியினர் புகார் செய்தனர். அதனடிப்படையில் போலீஸ் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். இந்நிலையில் நாகர்கோவில் பேருந்து நிலையத்தில் காணாமல் போன அக்குழந்தை வள்ளியூரில் மீட்கப்பட்டுள்ளது. வள்ளியூரில் குழந்தையை கடத்தி வைத்திருந்த ராஜி என்ற பெண்ணை போலீசார் கைதுசெய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். போலீசாரின் முதற்கட்ட விசாரணையில், குழந்தையை கடத்திச் சென்று சென்னையில் பிச்சை எடுத்ததும், பின்னர் போலீசார் குழந்தையை தேடுவதை அறிந்து குழந்தையை மீண்டும் கொண்டு வந்து ஒப்படைக்க வந்த இடத்தில் மாட்டிக் கொண்டதாகவும் தெரியவந்துள்ளது. போலீஸார் ராஜியிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.