கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலை அடுத்து உள்ள வெள்ளமடம் பகுதியை சேர்ந்தவர் செல்வராஜ்(56) கூலி தொழிலாளி. இவர், அதே பகுதியை சேர்ந்த மூன்றாம் வகுப்பு மாணவியை தன் வீட்டிற்கு வலுகட்டாயமாக இழுத்து சென்று பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.
அப்போது சிறுமியின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து சிறுமியை காப்பற்றினார்கள். இதனையடுத்து சிறுமியின் பெற்றோர்கள் நாகர்கோவில் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர்.