தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

சிறுமியை மிரட்டி திருமணம் - தாய்மாமன் கைது - நாகர்கோவில்

குமரியில் 15 வயது சிறுமியை மிரட்டி திருமணம் செய்த தாய்மாமனை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

சிறுமியை மிரட்டி குழந்தை திருமணம்
சிறுமியை மிரட்டி குழந்தை திருமணம்

By

Published : Jul 15, 2021, 10:10 AM IST

கன்னியாகுமரி: ஆரல்வாய்மொழி அருகே 15 வயது சிறுமியை அவரது தாய்மாமன் நாகராஜன் (30) திருமணம் செய்து கொள்ள வற்புறுத்தி வந்துள்ளார். மேலும் திருமணம் செய்து கொள்ளாவிட்டால் தற்கொலை செய்து கொள்வேன் என மிரட்டல் விடுத்துள்ளார்.

இதனைத்தொடர்ந்து சிறுமியின் பெற்றோருக்கு தெரியாமல் நாகராஜன் சிறுமியை திருமணம் செய்து கொண்டதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து நாகர்கோவில் அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் புகார் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் காவல்துறையினர் விசாரணை நடத்தி சிறுமியைத் திருமணம் செய்த நாகராஜனை நேற்று (ஜூலை 14) கைது செய்தனர்.

இதையும் படிங்க: குழந்தைத் திருமணத்தை ஏற்பாடு செய்வோர் மீது கடும் நடவடிக்கை'

ABOUT THE AUTHOR

...view details