கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே பறக்கை பகுதியைச் சேர்ந்தவர் விக்னேஷ். கட்டட தொழிலாளியான இவர் கடந்த 2017ஆம் ஆண்டு ஆரல்வாய்மொழி அரசுப்பள்ளியில் கட்டட பணிக்காக சென்றார். அப்போது பள்ளியில் பதினொன்றாம் வகுப்பு படித்து கொண்டிருந்த மாணவியை ஆளில்லாத இடத்திற்கு அழைத்து சென்று பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.
சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கு - குற்றவாளிக்கு 7 ஆண்டு சிறை - போக்சோ நீதிமன்றம்
கன்னியாகுமரி: 2017ஆம் ஆண்டு பதினொன்றாம் வகுப்பு மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் கைதான கட்டட தொழிலாளிக்கு ஏழு ஆண்டுகள் சிறை தண்டனையும் ஐயாயிரம் ரூபாய் அபராதமும் விதித்து போக்சோ நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
இது தொடர்பாக சிறுமியின் பெற்றோர் கொடுத்த புகாரின் அடிப்படையில், அனைத்து மகளிர் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விக்னேஷை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர். மூன்று வருடங்களாக நடைபெற்று வந்த வழக்கு விசாரணை நிறைவு பெற்ற நிலையில் நாகர்கோவில் போக்சோ சிறப்பு நீதிமன்ற நீதிபதி மகிழேந்தி குற்றவாளி விக்னேஷுக்கு ஏழு ஆண்டுகள் சிறை தண்டனையும், ஐயாயிரம் ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பு வழங்கினார்.
இதையும் படிங்க: சிறைச் சாலையிலேயே கையூட்டு, ஊழல்: சிறைத் துறை கூடுதல் காவல் இயக்குநர் வேதனை