இது தொடர்பாக கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் செய்தியாளர்களிடம் அவர் கூறுகையில்,
"நாகர்கோவில் தொகுதியில் கடந்த ஒன்பதரை ஆண்டுகளில் எந்த வளர்ச்சி பணிகளும் மேற்கொள்ளப்படவில்லை. நாகர்கோவிலில் பாதாள சாக்கடை திட்டம், கூட்டுக் குடிநீர் திட்டம், சாலைகள் சீரமைத்தல், மீனவ கிராமங்களை பாதுகாக்க தூண்டில் வளைவு, கடலரிப்பு தடுப்புச் சுவர் அமைத்தல் உள்ளிட்ட எந்த பணிகளையும் முடிக்கவில்லை. ஆட்சி முடிய ஆறு மாதங்கள் உள்ள நிலையில், வளர்ச்சிப் பணி மேற்கொள்ள முடியும் என்ற நம்பிக்கை இல்லாததால் முதலமைச்சர் பங்கேற்கும் ஆய்வுக் கூட்டத்தை புறக்கணிக்க இருக்கிறேன்.