கொரோனா வைரஸ் கோழி இறைச்சியின் மூலம் தான் பரவுகிறது என்று சமூக வலைதளங்களில் பரவும் வதந்தியை நம்பி மக்கள் பலரும் சிக்கன் உண்பதை நிறுத்தியுள்ளனர். இதனால், கறிக் கோழி விற்பனையும், முட்டை விலையும் சரிவைச் சந்தித்துள்ளன. இதை விட கொடூரமாக, இந்த வதந்தியை நம்பி கர்நாடகாவில் 6,000 கோழிகள் உயிருடன் புதைக்கப்பட்ட சம்பவமும் நிகழ்ந்துள்ளது.
குமரியில் 10 ரூபாய்க்கு சிக்கன் 65 - கொரோனா வதந்திக்கு முற்றுப்புள்ளி! - chicken 65 sale for 10rs at kanyakumari
கன்னியாகுமரி: கொரோனா வைரஸ் கோழி இறைச்சியின் மூலம் பரவும் என்று உலாவும் வதந்திக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக 10 ரூபாய்க்கு சிக்கன் 65 அளிக்கப்பட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டுவருகிறது.
![குமரியில் 10 ரூபாய்க்கு சிக்கன் 65 - கொரோனா வதந்திக்கு முற்றுப்புள்ளி! corona](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-6408912-thumbnail-3x2-dsdadasd.jpg)
இந்நிலையில், கன்னியாகுமரியில் கறிக்கோழிகள் மொத்த வியாபாரிகள் சங்கம் சார்பில் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் வதந்தி பரப்புவோர் மீது நடவடிக்கை எடுக்கும்படி புகார் கொடுக்கப்பட்டது. இதுமட்டுமின்றி மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் இருளப்பபுரம் பகுதியில் பத்து ரூபாய்க்கு சிக்கன் 65 வழங்கும் நிகழ்வு நடைபெற்றது. இந்தத் தகவல் மூலைமுடுக்கெல்லாம் பரவ கடைகளில் கூட்டம் அலைமோதியது. இங்கு ஏராளமானோர் ரூ.10க்கு ஒரு பாக்ஸ் சிக்கன் 65 வாங்கி உண்டு மகிழ்ந்தனர்.
இதையும் படிங்க:கொரோனா எதிரொலி: பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்க அறிவுறுத்தல்!