தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தமிழ்நாடு-கேரள எல்லையில் மூடிக்கிடக்கும் சோதனைச்சாவடியால் கடத்தல் அதிகரிக்க வாய்ப்பு - Tamilnadu-Keral border

கன்னியாகுமரி: குமரி மாவட்டம் தமிழ்நாடு-கேரள எல்லையில் மூடிக்கிடக்கும் சோதனைச்சாவடியால் கடத்தல் அதிகரிக்க வாய்ப்புள்ளதால் காவல் துறையினரை நியமித்து செயல்படுத்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கன்னியாகுமரி
கன்னியாகுமரி

By

Published : Nov 18, 2020, 1:20 PM IST

தமிழ்நாட்டிலிருந்து கேரளா மாநிலத்திற்கு அரிசி, எரிசாராயம், போதைப்பொருள்கள் கடத்தல் அதிகரித்துவந்தது. இதைத்தொடர்ந்து எல்லைப் பகுதிகளில் சோதனைச்சாவடிகள் அமைத்து தீவிரமாகக் கண்காணித்துவந்தனர்.

குமரி மாவட்டத்தில் தமிழ்நாடு-கேரளா எல்லைப் பகுதியான களியக்காவிளை அருகே படந்தாலுமூடு சோதனைச்சாவடி இயங்கிவந்தது. இந்நிலையில் கரோனா நோய்த்தடுப்பு காரணத்தை கருத்தில்கொண்டு களியக்காவிளை உள்ளிட்ட சோதனைச்சாவடிகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது.

ஆனால் அதனருகிலுள்ள படந்தாலுமூடு சோதனைச்சாவடியில் காவல்துறை பாதுகாப்புப் பணிகளில் இல்லாமல் சோதனைச்சாவடி மூடியுள்ளது. இதனையடுத்து அப்பகுதி வழியாக வாழைதாரில் மறைத்து வாகனங்கள் மூலம் அரிசி ,போதைப்பொருள்கள் கடத்தல்கள் மீண்டும் தலைவிரிக்க துவங்கியுள்ளது.

படந்தாலுமூடு சோதனைச்சாவடியை கடந்து சிறுசிறு வழிகள் மூலம் கேரளா மாநிலத்திற்கு கடத்தல் பொருள்கள் கொண்டுச் செல்லப்படுவதால், மறுபடியும் படந்தாலுமூடு சோதனைச்சாவடியில் பாதுகாப்புப் பணிகளை அதிகரிக்க வேண்டுமென கோரிக்கை எழுந்துள்ளது.

ABOUT THE AUTHOR

...view details