தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

நாகர்கோவில் காசி வழக்கு -  குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய சிபிசிஐடி தீவிரம்

இளம்பெண்களை ஏமாற்றி ஆபாசமாக வீடியோ, புகைப்படங்கள் எடுத்து மிரட்டிய வழக்கில் கைதான காசி மீது மேலும் இரண்டு வழக்குகளில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய சிபிசிஐடி காவல் துறையினர் தீவிரம் காட்டி வருகின்றனர்.

ஆபாச படமெடுத்து பெண்களை மிரட்டிய காசி மீது மேலும் இரண்டு வழக்குகளில் குற்றப்பத்திரிகை தாக்கல் -சிபிசிஐடி தீவிரம்...
ஆபாச படமெடுத்து பெண்களை மிரட்டிய காசி மீது மேலும் இரண்டு வழக்குகளில் குற்றப்பத்திரிகை தாக்கல் -சிபிசிஐடி தீவிரம்...

By

Published : Jul 7, 2022, 11:11 AM IST

கன்னியாகுமரி: நாகர்கோவில் கணேசபுரம் பகுதியைச் சேர்ந்தவர் தங்கபாண்டியன். இவரது மகன் சுஜி என்ற காசி சென்னையைச் சேர்ந்த பெண் பொறியாளர் ஒருவரை 2020ஆம் ஆண்டு ஆபாச படம் எடுத்து பணம் கேட்டு மிரட்டுவதாக ஆன்லைன் மூலம் கன்னியாகுமரி மாவட்ட எஸ்பி அலுவலகத்திற்கு புகார் அளித்தார்.

இதே போன்று நாகர்கோவில் பகுதிகளிலும் ஒரு பெண் புகார் அளித்திருந்தார். இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் காசியை கைது செய்தனர். விசாரணையில் சமூக வலைத்தளங்கள் மூலம் ஏராளமான இளம்பெண்கள், முக்கிய பிரமுகர்களின் மனைவி, கல்லூரி மாணவிகள் ஆகியோர்களை இவரது வலையில் சிக்கவைத்தது அம்பலமானது.

இது தொடர்பாக நாகர்கோவில் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் இரண்டு வழக்கிலும், கன்னியாகுமரி மகளிர் காவல் நிலையத்தில் ஒரு போக்சோ வழக்கும், ஆரல்வாய்மொழி காவல் நிலையத்தில் இரண்டு வழக்குகள், நேசமணி நகர் காவல் நிலையத்தில் ஒரு வழக்கு, வடசேரி காவல் நிலையத்தில் இரண்டு வழக்கு என மொத்தம் எட்டு வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.

ஆபாச படமெடுத்து பெண்களை மிரட்டிய காசி

வடசேரி காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்ட வழக்கில் கந்து வட்டி வழக்கும் மற்ற காவல் நிலையங்களில் பெண் பாலியல் வன்கொடுமை மற்றும் பெண் ஆபாச படம் எடுத்து மிரட்டிய வழக்குகள் பதிவாகியது. காசி விவகாரம் பெருமளவில் விஸ்வரூபம் எடுத்ததை தொடர்ந்து இந்த வழக்கு சிபிசிஐடி காவல் துறையினருக்கு மாற்றம் செய்யப்பட்டது. பின்னர் இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியான அவரது நண்பர் வெளிநாட்டு தப்பி சென்று விட்டார். விசா காலம் முடிந்தும் அவருடைய தலை மறைவு இன்னும் தொடர்கிறது.

இதற்கிடையே சாட்சியங்களை அழிக்க முயற்சி செய்த விவகாரத்தில் அவருடைய தந்தை தங்கபாண்டியனையும் காவல் துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர். தங்கபாண்டியன் ஜாமீன் கேட்டு உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்ட நிலையில் அதனை நீதிமன்றம் நிராகரித்துவிட்டது.

இந்நிலையில் தற்போது காசி மீதான மேலும் இரண்டு வழக்குகளில் குற்றப்பத்திரிகை விரைவில் தாக்கல் செய்ய சிபிசிஐடி காவல் துறையினர் தீவிரம் காட்டி வருகின்றனர். இதுவரை 60 பெண்களிடம் சாட்சியம் வாங்கியுள்ளனர். மேலும் பாதிக்கப்பட்ட பெண்களிடம் சிபிசிஐடிய காவல் துறையினர் குமரி மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் ரகசிய விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதையும் படிங்க:சென்னையில் வாகனத்தணிக்கையின்போது போலீசாரிடம் சிக்கிய 1.1 கிலோ கஞ்சா..!

ABOUT THE AUTHOR

...view details