கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டம் மைய பகுதியில் செயல்பட்டு வரும் வணிக வளாகத்தில் கம்யூட்டர், எலக்டாரானிக்ஸ், மொபைல் விற்பனை மற்றும் சர்வீஸ் கடைகள் செயல் பட்டு வருகிறது.
இந்த கடைகளில் அடையாளம் தெரியாத நபர் ஒருவர் கடைகளின் பூட்டை உடைத்து பதினைந்து லட்சம் ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் மற்றும் பணத்தை கொள்ளையடித்து சென்றுள்ளார். முன்னதாக அந்த நபர் கடைகளில் பொறுமையாக அமர்ந்து பணத்தை எண்ணியுள்ளார்.
கொள்ளையடித்த பணத்தை பெறுமையாக இருந்து எண்ணிய கெள்ளையன் இவரின் உருவம் அங்கிருந்த சிசிடிவி கேமிராக்களில் தெளிவாக பதிவாகியுள்ளது. இதனயடுத்து இக்கடைகளின் உரிமையாளர்கள் மார்த்தாண்டம் காவல்துறைக்கு புகார் அளித்தனர். அதன் அடிப்படையில் நிகழ்விடத்திற்கு வந்த காவல்துறையினர் அங்கிருந்த சிசிடிவி காட்சியை ஆராய்ந்தனர். அப்போது சிசிடிவியில் பதிவான நபர் ஏற்கனவே தமிழ்நாடு கேரளாவில் பல்வேறு திருட்டு சம்பவங்களில் கைதாகி சிறையில் இருந்து வெளியே வந்தவர் என்று காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
மார்த்தாண்டம் பகுதியில் தொடரும் கொள்ளையால் வியாபாரிகள் கலக்கத்தில் உள்ளனர். கொள்ளையனை உடனே கைது செய்யாவிட்டால் போரட்டம் நடத்த உள்ளதாக வர்த்தக சங்கத்தினர் அறிவித்துள்ளனர்.