கன்னியாகுமரி மாவட்டம் இருளப்பபுரம் பகுதியைச் சேர்ந்தவர் உதவி காவல் ஆய்வாளர் குருநாதன். இவர் தக்கலை போக்குவரத்து காவல் நிலையத்தில் பணியாற்றி வருகிறார்.
நேற்று (பிப்.6) மாலை குருநாதன் நாகர்கோவில்-திருவனந்தபுரம் தேசிய நெடுஞ்சாலை அருகே அழகியமண்டபம் பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார்.
அப்போது தக்கலையில் இருந்து அழகியமண்டபம் பகுதிக்கு இருசக்கர வாகனத்தில் ஹெல்மெட் அணியாமல் மூன்று இளைஞர்கள் வந்தனர். குருநாதன் சாலை நடுவே சென்று அவர்களை தடுத்து நிறுத்த முயன்றார்.
உதவி காவல் ஆய்வாளர் தூக்கி வீசப்படும் சிசிடிவி காட்சி அதிவேகமாக வந்த இளைஞர்கள் வாகனத்தை நிறுத்தாமல் குருநாதன் மீது மோதி தப்பிச் சென்றனர். இதில் குருநாதன் தூக்கி வீசப்பட்டு படுகாயமடைந்தார். அவரை சக காவலர்கள் மீட்டு நாகர்கோவிலில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.
இந்தச் சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த தக்கலை காவல் துறையினர் இளைஞர்களை தேடி வருகின்றனர். இருசக்கர வாகனம் மோதியதில் உதவி காவல் ஆய்வாளர் தூக்கி வீசப்படும் சிசிடிவி காட்சி தற்போது வெளியாகியுள்ளது.
இதையும் படிங்க: திமுக பிரமுகர் வெட்டிக்கொலை: பதைபதைக்க வைக்கும் சிசிடிவி காட்சி வெளியீடு!