கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே வெள்ளாச்சிவிளை, தாழக்குடி உள்ளிட்ட சுற்றுவட்டார கிராமங்களில் உள்ள விவசாயிகள் அதிகளவில் மாடுகளை வளர்க்கின்றனர். இவர்கள் இன்று (ஜனவரி 16) மாட்டுப் பொங்கல் விழாவை வெகு விமர்சையாக கொண்டிவருகின்றனர். மாடுகளுக்கு மாலைகள் அணிவித்தும், வண்ணங்கள் பூசியும், மண்பானையில் பொங்கல் வைத்தும் உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர்.
கன்னியாகுமரியில் மாட்டுப்பொங்கல் கோலாகலம் - Kanyakumari news
பொங்கல் பண்டிகையின் மூன்றாவது நாள் விழாவான மாட்டுப் பொங்கல் கன்னியாகுமரியில் விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது.
மாட்டுப் பொங்கல்: வீடுகளில் வெகு விமர்சையாக கொண்டாடிய மக்கள்!
சூரியனுக்கும், கால் நடைகளுக்கும், விவசாயிகளுக்கும் இடையேயான பிணைப்பை வலியுறுத்தும் விழாவாக மாட்டுப்பொங்கல் அமைந்து உள்ளது. ஆண்டு முழுவதும் வயலில் ஏறு பூட்டி உழுது கொடுப்பது முதல் வீட்டில் பால் மூலம் வருமானம் ஈட்டித்தருவது வரை கால்நடைகள் மக்களின் வாழ்க்கையில் முக்கியத்துவம் பெற்றுள்ளது.
இதையும் படிங்க: பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டி இன்று தொடங்குகிறது