கன்னியாகுமரி மாவட்டம், முளகுமூட்டில் கடந்த 21ஆம் தேதி பாஜக நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பாஜக மாநிலத் தலைவர் முருகன் கலந்துகொண்டார். இதற்காக கன்னியாகுமரி வந்த அவருக்கு மாவட்ட எல்லையான முப்பந்தல் இசக்கியம்மன் கோயில் முன்பு, உற்சாக வரவேற்பு வழங்கப்பட்டது. இதை தொடர்ந்து அங்கிருந்து கூட்டம் நடைபெற்ற முளகுமூடு பகுதி வரை, ஏராளமாக பாஜக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் வாகனங்களில் ஊர்வலமாக சென்றனர்.
குமரியில் ஊரடங்கு விதிமீறல்... பாஜகவைச் சேர்ந்த 970 பேர் மீது வழக்குப்பதிவு! - Tamilnadu bjp head murugan
கன்னியாகுமரி: பாஜக மாநிலத் தலைவர் முருகன் வந்த சமயத்தில், 144 தடை உத்தரவை மீறி ஊர்வலம் சென்ற குற்றத்திற்காக 970 பாஜகவினர் மீது காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
ase
இந்நிலையில், 144 தடை உத்தரவை மீறி ஊர்வலமாக சென்றதற்காக பாஜகவைச் சேர்ந்த 970 பேர் மீது கன்னியாகுமரி மாவட்ட காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இது அக்கட்சி தொண்டர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.