கன்னியாகுமரி மாவட்டம் ஆரல்வாய்மொழி காவல் சரகத்திற்குள்பட்ட தோவாளை அண்ணாநகர் பகுதியில் காவல் துறையினர், ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது, சந்தேகத்திற்கு இடமான முறையில் இருசக்கர வாகனத்தில் சுற்றித்திரிந்த மூன்று இளைஞர்களைப் பிடித்த காவல் துறையினர், அவர்களது உடமைகளைச் சோதனை செய்தனர்.
சோதனையில், அவர்களிடம் ஒன்றரை கிலோ கஞ்சா இருந்தது தெரியவந்தது. இதையடுத்து, அவர்களிடம் நடத்திய விசாரணையில், கஞ்சாவை விற்பனைக்காக எடுத்துவந்ததாகத் தெரிவித்துள்ளனர்.