கன்னியாகுமரி மாவட்டத்தில் அண்மைக் காலமாக போதை ஊசி மருந்துகள், கஞ்சா ஆகியவை பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு விற்பனை செய்யும் சட்டவிரோதமான சம்பவங்கள் அதிகரித்ததாகக் கூறப்படுகிறது.
கல்வி நிலையங்கள் அருகிலேயும், பேருந்து நிலையங்களிலும் அடையாளம் தெரியாத நபர்கள் போதைப் பொருட்களை சர்வ சாதாரணமாக விற்பனை செய்வதாகப் புகார்களும் எழுந்தன. இதனைக் கண்டுபிடிக்க காவல் துறையினருக்கு பெரும் சவாலாக உள்ளது.
ஆரல்வாய்மொழி சுற்றுவட்டாரப் பகுதிகளில் நூற்றுக்கும் மேற்பட்ட செங்கல் சூளைகள் இயங்கி வருகின்றன. இதில் வட மாநிலங்களைச் சேர்ந்த ஏராளமானோர் பணி புரிகின்றனர். அதில் மேற்கு வங்காளத்தைச் சேர்ந்த சமரோஜீட் பிஸ்வாஸ் (வயது 33) என்ற இளைஞர், அங்கு பணி புரிந்து வந்திருக்கிறார். இந்நிலையில் அவர் அப்பகுதியில் யாருக்கும் தெரியாமல் கஞ்சா செடிகளையும் வளர்த்து பாதுகாத்து வந்திருக்கிறார்.