தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

குடியுரிமை திருத்தச் சட்டம் - இஸ்லாமியர்கள் ஆர்ப்பாட்டம் - caa protest in kanyakumari

கன்னியாகுமரி: இளங்கடையில் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கும், தேசிய குடிமக்கள் பதிவேட்டுக்கும் எதிர்ப்பு தெரிவித்து இஸ்லாமிய இயக்கங்கள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

caa protest in kanyakumari, கன்னியாகுமரி குடியுரிமை திருத்தச் சட்ட போராட்டம்
கன்னியாகுமரி குடியுரிமை திருத்தச் சட்ட போராட்டம்

By

Published : Jan 10, 2020, 8:27 PM IST

மத்திய அரசு கொண்டு வந்துள்ள குடியுரிமை திருத்தச் சட்டத்தையும், தேசிய குடிமக்கள் பதிவேட்டிற்கும் பல்வேறு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். மேலும் இச்சட்டத்தை திரும்பப் பெற வலியுறுத்தி கட்சிகள், கல்லூரி மாணவர்கள், பொதுமக்கள் என அனைத்து தரப்பினரும் போராட்டங்கள் நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில், நாகர்கோவில் அடுத்த இளங்கடையில் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஜமாத் கூட்டமைப்பு, உலமா சபை ஆகிய இஸ்லாமிய இயக்கங்கள் சார்பில் ஊர்வலமும், ஆர்ப்பாட்டமும் நடைபெற்றது. இதில் திமுக சட்டப்பேரவை உறுப்பினர்களான சுரேஷ்ராஜன், ஆஸ்டின், கிறிஸ்தவ பேராயர்கள் பீட்டர் ரெமிஜியூஸ், ஞானதாசன் உட்பட இரண்டாயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.

குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக பேரணி - முடங்கிய ஹைதராபாத்!

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details