கன்னியாகுமரி மாவட்டத்திற்குட்பட்ட பகுதியில் உள்ள வனப்பகுதியில் வண்ணத்துப்பூச்சிகள் கூட்டம் அழகாகவும், அமைதியாகவும் பறந்து திரிந்து வந்தன. தற்போது இந்த பட்டாம்பூச்சிகள் வனப்பகுதியிலிருந்து பறந்து தடிக்காரன்கோணம், கொத்தளம் பள்ளம், கீரிப்பாறை, அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் அமைந்துள்ள குடியிருப்புப் பகுதிகளுக்கு கூட்டம் கூட்டமாக வருவது அங்குள்ள மக்களை பிரம்மிப்பில் ஆழ்த்தியுள்ளது.
கண்கவர் பட்டாம்பூச்சிகள்; மகிழ்ச்சி பொங்க ரசிக்கும் மக்கள்! - butterflies
நாகர்கோவில்: வனப்பகுதியிலிருந்து கூட்டம் கூட்டமாக பறந்துவரும் வண்ணத்துப்பூச்சிகள் கூட்டம் பொதுமக்களை பிரம்மிப்பில் ஆழ்த்திவருகிறது.
பட்டாம்பூச்சி
அதிலும் குறிப்பாக, கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு பச்சை நிற வண்ணத்துப்பூச்சிகள் கூட்டம் அதிகம் காணப்படுவதாகவும், அவை சாலையோரங்களில் இருப்பது செடிகள் வளர்ந்துள்ளதை போல காட்சி தருவதாகவும் அப்பகுதி மக்கள் கூறுகின்றனர்.
மே மாதங்களில் அதிக அளவில் காணப்படும் இந்த வண்ணத்துப்பூச்சிகள் கண்களுக்கு விருந்தாக அமைந்திருப்பதாகவும், அதை பார்க்க பார்க்க பிரம்மிப்பாக இருப்பதாகவும் அவர்கள் தெரிவிக்கின்றனர்.