தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

குமரியில் நாளை முதல் பேருந்துகள் இயக்கம்: முழு வீச்சில் பராமரிப்புப் பணி - முழு வீச்சில் பராமரிப்பு பணி

கன்னியாகுமரியில் நாளை முதல் பேருந்துகள் இயக்கப்பட உள்ள நிலையில், மாவட்டத்தில் உள்ள பணிமனைகளில் அரசுப் பேருந்துகளை சுத்தம் செய்து பேருந்துகளை தயார் செய்யும் பணி நடைபெற்றுவருகிறது.

பேருந்துகள்
பேருந்துகள்

By

Published : Jun 27, 2021, 2:37 PM IST

கன்னியாகுமரி: கரோனா தொற்று குறைந்த 23 மாவட்டங்களில் நாளை (ஜூன்.28) முதல் பேருந்து போக்குவரத்துத் தொடங்கப்பட உள்ளது.

கன்னியாகுமரி மாவட்டத்தில் தொற்று குறைந்துள்ளதால், நாளை காலை 6 மணி முதல் 50 விழுக்காடு பயணிகளுடன் பேருந்துகள் இயங்க அனுமதியளிக்கப்பட்டுள்ளது.

பேருந்துகளை தயார் செய்யும் பணி

இந்த மாவட்டத்தில் ராணித் தோட்டம், செட்டிக்குளம், திங்கள்சந்தை, குளச்சல், களியக்காவிளை, கன்னியாகுமரி, விவேகானந்தபுரம், குழித்துறை உட்பட 13 பணிமனைகள் உள்ளன. இவற்றில் 840 பேருந்துகள் உள்ளன. முதற்கட்டமாக 500 பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.

நாளை முதல் பேருந்துகள் இயக்கப்பட உள்ள நிலையில், மாவட்டத்தில் உள்ள பணிமனைகளில் நிறுத்தப்பட்டுள்ள அரசுப் பேருந்துகளை சுத்தம் செய்து பேருந்துகளை தயார் செய்யும் பணி தீவிரமாக நடைபெற்றுவருகிறது.

இதையும் படிங்க: இயக்குநர் ஷங்கர் மகள் திருமணம்: நேரில் சென்று வாழ்த்திய முதலமைச்சர்!

ABOUT THE AUTHOR

...view details