வங்கக் கடலில் ஏற்பட்டுள்ள குறைந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் காரணமாக கன்னியாகுமரி மாவட்டத்தில் புயல் மற்றும் மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இதற்கு மாவட்ட நிர்வாகம் சார்பில் பாதுகாப்பு முன்னேற்பாடு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
இந்நிலையில் கன்னியாகுமரி மாவட்ட வேளாண்மை துறை சார்பில் அகஸ்தீஸ்வரம், ராஜாக்கமங்கலம், தோவாளை வட்டார பகுதிகளில் விவசாயிகள் தங்கள் பயிர்களையும், மரங்களையும் எவ்வாறு பாதுகாக்க வேண்டும். கனமழை மற்றும் புயலிலிருந்து பயிர், மரங்களை காக்க விவசாயிகள் கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகள் குறித்தும், பயிர்களுக்கும் மரங்களுக்கும் காப்பீடு செய்வதால் கிடைக்கும் பலன்கள் குறித்தும், எவ்வாறு காப்பீடு செய்ய வேண்டும் என்பது குறித்தும் தெருக்களில் கலாச்சார கலைநிகழ்ச்சிகள் மூலம் விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றனர்.