தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

நாகர்கோவிலில் ரோக்ளா ரேஸ்... சீறி பாய்ந்த காளைகள்... - வில்வண்டி

நாகர்கோவிலில் இருபிரிவுகளாக நடந்த ரோக்ளா ரேஸ் பந்தயத்தில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

Etv Bharat
Etv Bharat

By

Published : Oct 26, 2022, 11:22 AM IST

கன்னியாகுமரி:நாகர்கோவில் பள்ளிவிளையில் காமராஜர் இளைஞர் நற்பணி மன்ற அறக்கட்டளை சார்பாக தீபாவளையை முன்னிட்டு 20ஆம் ஆண்டு ரோக்ளா ரேஸ் போட்டிநடந்தது. இந்த போட்டியில் சீறி பாய்ந்த காளைகளை ஏராளமான பொதுமக்கள் ஆர்முடன் கண்டுகளித்தனர். கடந்த 23ஆம் தேதி தொடங்கி மூன்று நாட்களாக நடந்து வந்த விழாவின் நிறைவாக, வில்வண்டி, தட்டு வண்டி என்று இரு பிரிவுகளாக ரோக்ளா ரேஸ் போட்டிகள் நடைபெற்றன.

சீறி பாய்ந்த காளைகள்

போட்டியின் முடிவில், வில் வண்டியில் வெற்றி பெற்றவருக்கு முதல் பரிசாக ரூ.10,001, 2ஆம் பரிசாக ரூ.8,001 வழங்கப்பட்டது. அதைபோல், தட்டு வண்டியில் முதல் பரிசு பெற்றவருக்கு ரூ.8,001 , 2ஆம் பரிசாக ரூ.5,001 வழங்கி கௌரவிக்கப்பட்டது.

இதையும் படிங்க:இந்து - இஸ்லாமியர்கள் சேர்ந்து கொண்டாடிய ’மயிலந்தீபாவளி’

ABOUT THE AUTHOR

...view details