தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கட்டுமான வல்லுனர் சங்கத்தினர்ஆட்சியரிடம் மனு

கன்னியாகுமரி: ஊரடங்கு உத்தரவினால் பாதிக்கப்பட்ட தமிழ்நாடு கட்டுமான வல்லுனர் சங்கத்தினர் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

கட்டுமான வல்லுனர் சங்கம் மாவட்ட ஆட்சியரிடம் மனு
கட்டுமான வல்லுனர் சங்கம் மாவட்ட ஆட்சியரிடம் மனு

By

Published : May 14, 2020, 12:46 AM IST

தமிழ்நாடு கட்டுமான வல்லுனர் சங்கம் சார்பில் கோரிக்கைகளை வலியுறுத்தி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டுள்ளது.

அந்த மனுவில் கூறியிருப்பதாவது;

தமிழ்நாட்டில் கரோனா பாதிப்பு காரணமாக கட்டுமான தொழிலுக்கு மிக முக்கிய தேவையான மணல், சிமெண்டு, ஜல்லி, கம்பி போன்ற கட்டுமான பொருள்களின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. இதனால் ஏற்கனவே நாங்கள் போட்ட ஒப்பந்தத்தின்படி எங்களால் கட்டுமான பணியில் ஈடுபட முடியவில்லை. எனவே இந்த பொருள்களின் விலை உயர்வை குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இதேபோல் வங்கிகளில் கடன் பெற்று கட்டுமான தொழில் மேற்கொள்கிறோம். எனவே வங்கிகளில் வாங்கியுள்ள கடன்களின் வட்டி தொகையை குறைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், ஜிஎஸ்டி வரியில் 50 சதவீதம் குறைக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: மாணவர்கள் தேர்வுக்கு முகக்கவசம் அணிந்து வர வேண்டும் - அமைச்சர் செங்கோட்டையன்

ABOUT THE AUTHOR

...view details