தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

குமரியில் பி.எஸ்.என்.எல். அலுவலக ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்! - kaniyakumari latest news

கன்னியாகுமரி: நாகர்கோவிலிலுள்ள பி.எஸ்.என்.எல். அலுவலகத்தில் ஊழியர்களுக்கு உரிய நேரத்தில் ஊதியம், ஓய்வூதிய வயது குறைப்பு உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து அதன் ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

kaniyakumari

By

Published : Oct 4, 2019, 8:45 PM IST

கன்னியாகுமரி, நாகர்கோவிலில் உள்ள பி.எஸ்.என்.எல். மாவட்ட தலைமை அலுவலக ஊழியர்கள், பி.எஸ்.என்.எல். நிறுவனத்தில் 4ஜி அலைக்கற்றை சேவை, ஊழியர்களுக்கு உரிய நேரத்தில் ஊதியம், ஓய்வூதிய வயது குறைப்பு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து அவர்கள், 'பி.எஸ்.என்.எல். நிறுவனம் தொடங்கப்பட்டு 19 ஆண்டுகள் நிறைவடைந்து தற்போது 20ஆவது ஆண்டு தொடங்கவுள்ளது. இந்நிலையில், கடந்த 19 ஆண்டுகளாக சிறந்த சேவையாற்றிய இந்நிறுவனம் தற்போது சோதனைக் காலத்திலுள்ளது.

எனவே, அதன் ஊழியர்களை இந்நிறுவனத்திலேயே நிலைநாட்ட பிஎஸ்என்எல் நிறுவனம் 100% அரசுத்துறை நிறுவனமாகவே தொடர்ந்து இயங்க வேண்டும். இதில் 4ஜி அலைக்கற்றை சேவையை துவங்க வேண்டும். மேலும், ஊழியர்களுக்கு உரிய நேரத்தில் ஊதியம் வழங்கவேண்டும், ஓய்வூதிய வயதை 60லிருந்து 58ஆக குறைக்கக் கூடாது' என்று கூறினர்.

குமரியில் பி.எஸ்.என்.எல். அலுவலக ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

இதையும் படிங்க:

உதகையில் பிஎஸ்என்எல் ஊழியர்கள் வேலைநிறுத்தப் போராட்டம்

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details