கன்னியாகுமரி மாவட்டம், தோவாளை பண்டாரபுரத்தில் ஆர்.டி.ஓ., அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இந்த அலுவலகத்தில் விடுமுறை தினமான இன்று பணப் பரிமாற்றம் நடைபெறுவதாக ஊழல் தடுப்பு மற்றும் லஞ்ச ஒழிப்புத்துறையினருக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து, லஞ்ச ஒழிப்புத்துறை டி.எஸ்.பி., மதியழகன் தலைமையிலான காவல்துறையினர், ஆர்.டி.ஓ., அலுவலகத்துக்கு சென்றபோது போக்குவரத்து காவலர் செந்தில்குமார் தனது காரில் புறப்பட்டு சென்றதாக தகவல் கிடைத்தது.
ஆர்.டி.ஓ. அலுவலகத்தில் ரூ.49,600 லஞ்சப் பணம் பறிமுதல்! - rto office
கன்னியாகுமரி: நாகர்கோவில் ஆர்.டி.ஓ., அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு காவல்துறையினர் மேற்கொண்ட திடீர் சோதனையில், கணக்கில் வராத ரூ.49,600 பறிமுதல் செய்யப்பட்டது.

rto office
ஆர்.டி.ஓ அலுவலகம்
இதனைத் தொடர்ந்து காவல்துறையினர் செந்தில்குமாரின் காரை வழிமறித்து சோதனை செய்தனர். அப்போது அவரிடம் இருந்து ரூ.49 ஆயிரத்து 600 இருந்தது தெரியவந்தது. அதன்பின், அந்த பணத்தை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர். விடுமுறை தினத்தில் ஆர்.டி.ஓ., அலுவலகத்தில் லஞ்ச பணப்பரிமாற்றம் நடந்தது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.