கன்னியாகுமரி மாவட்டம், படந்தாலுமூடு பகுதியைச் சேர்ந்தவர் ரமேஷ்குமார். இவர் காரக்கோடு பகுதியில் கல்குவாரி நடத்திவருகிறார். கடந்த 2011ஆம் ஆண்டு ஜூன் 13ஆம் தேதி கல்குவாரியிலிருந்து கல் எடுத்துச் செல்வதற்காக அனுமதி சீட்டு கேட்டு மாவட்ட கனிமவளத் துறை உதவி இயக்குநர் மாரிமுத்துவிடம் விண்ணப்பித்தார்.
அப்போது அனுமதிச்சீட்டு வழங்க ரூ.25 ஆயிரம் லஞ்சமாக தர வேண்டும் என்று மாரிமுத்து கூறியுள்ளார். இதையடுத்து ரமேஷ்குமார் குமரி மாவட்ட லஞ்ச ஒழிப்பு கண்காணிப்பு பிரிவு காவல்துறையினருக்கு தகவல் அளித்தார். அதன்பேரில், 2011ஆம் ஆண்டு ஜூன் 15ஆம் தேதி ரமேஷ்குமாரிடம், அலுவலர் மாரிமுத்துவுக்கு லஞ்சம் பெற்ற போது அவரை காவலர்கள் கைது செய்தனர்.