தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

நீரில் மிதந்த 7 வயது சிறுவன்! - சிறுவன்

கன்னியாகுமரி: நித்திரவிளை அருகே 7 வயது சிறுவன் தொடர்ந்து 2 மணி நேரத்துக்கும் மேல் நீரில் மிதந்து உலக சாதனை முயற்சியில் ஈடுபட்டார்.

நீரில் மிதக்கும் சிறுவன்

By

Published : Jul 11, 2019, 5:44 PM IST

Updated : Jul 11, 2019, 11:47 PM IST

கன்னியாகுமரி மாவட்டம் நித்திரவிளை அருகே எஸ்.டி.மங்காடு பகுதியை சேர்ந்தவர் பிரதீஷ்(7). இவர் வாவறை அருகேயுள்ள புதுக்குளத்தில் 2 மணி 6 நிமிடம் தொடர்ந்து நீரில் மிதந்து சாதனை முயற்சியில் ஈடுபட்டார்.

நீரில் மிதக்கும் சிறுவன்

இச்சாதனை குறித்து சிறுவனின் பயிற்சியாளர் ஜஸ்டின் கூறுகையில்,

நீரில் அதிக நேரம் மிதந்து சாதனை படைத்ததாக ஏற்கனவே 14 வயதுக்கு மேற்பட்டோரின் சாதனை நிகழ்வு, உலக சாதனை புத்தகத்தில் இடம் பெற்றுள்ளது. தற்போது ஏழு வயது சிறுவன் பிரதீஷ், 2 மணி 6 நிமிடம் வரை தொடர்ந்து நீரில் மிதந்து சாதனை படைத்தார். இதுகுறித்து யூனிக் உலக சாதனை மற்றும் மிராக்கிள் உலக சாதனை உள்ளிட்ட உலக சாதனை அமைப்புகளின் நிர்வாகிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது என்றார்.

Last Updated : Jul 11, 2019, 11:47 PM IST

ABOUT THE AUTHOR

...view details