கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிகோட்டை அருகேயுள்ள முத்துராயன்கொட்டாய் கிராமத்தில் பசுமைகுடில்களில் வட மாநிலத்தை சேர்தவர்கள் 40க்கும் மேற்பட்ட கொத்தடிமைகள், உணவின்றி தவித்து வருவதாக கிடைத்த தகவலையடுத்து வருவாய்த் துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று அவர்களிடம் விசாரணை நடத்தினர். அப்போது அன்றாடம் சாப்பிடுவதற்கு ஒருவேளை உணவு இல்லாமல் சிறைபட்டு தவித்து வந்தது தெரியவந்தது. இதனையடுத்து அந்த 40 கொத்தடிமைகளையும் வருவாய் துறையினர் மீட்டனர்.
பசுமைகுடில்களில் கொத்தடிமைகள்: 40க்கும் மேற்பட்ட வடமாநில தொழிலாளர்கள் மீட்பு - பசுமைகுடில்களில் கொத்தடிமைகள் மீட்பு
கிருஷ்ணகிரி: தேன்கனிகோட்டை அருகே பசுமைகுடில்களில் கொத்தடிமைகளாக இருந்த 40க்கும் மேற்பட்ட வடமாநில தொழிலாளர்கள் மீட்கப்பட்டனர்.
bonded labors rescued from krishnagiri by revenue officers
மீட்கப்பட்ட வடமாநில கொத்தடிமைகள் அனைவரையும் தேன்கனிகோட்டையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் பாதுகாப்பாக தங்கவைத்து இவர்களுக்கு வேண்டிய உணவு, இருப்பிடம் வசதியை வருவாய்த்துறையினர் வழங்கினர். இவர்கள் அனைவரையும் விரைவில் பாதுகாப்பாக அவர்களது சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்க உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இதையும் படிங்க... காஞ்சிபுரத்தில் கொத்தடிமைகளாக நடத்தப்பட்ட 21 பேர் மீட்பு!