கரோனா பரவல் காரணமாக உலகம் முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டது. இதனால், கடல் நடுவே அமைந்துள்ள விவேகானந்தர் நினைவு மண்டபம், திருவள்ளுவர் சிலைக்கு செல்லும் சுற்றுலா படகு போக்குவரத்து சேவையும் நிறுத்தப்பட்டது. இதனால் கடந்த ஏழு மாதங்களுக்கும் மேலாக சுற்றுலாப் பயணிகள் இன்றி குமரி கடல் வெறிச்சோடி காணப்பட்டது.
தற்போது, கரோனா கட்டுப்பாடுகளில் தளர்வு அளிக்கப்பட்டதால் பகவதியம்மன் கோயில் நடை திறக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக வார இறுதி நாட்களில் உள்ளூர் சுற்றுலாப் பயணிகள் அதிகளவில் கன்னியாகுமரிக்கு வருகின்றனர். இதனிடையே, சுவாமி விவேகானந்தர் மண்டபம், திருவள்ளுவர் சிலைக்கு படகு சேவை தொடங்க அரசு நடவடிக்கை எடுத்தால் மட்டுமே சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை அதிகரிக்கும் என்று வியாபாரிகள் தெரிவித்தனர்.