தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கடல் சீற்றத்தால் படகு தளம் சேதம் - கரோனா வைரஸ்

கன்னியாகுமரி: கடல் சீற்றம் காரணமாக பூம்புகார் படகு தளம் சேதமடைந்ததால் படகுகளை நிறுத்தி வைப்பதில் சிரமம் ஏற்பட்டுள்ளது.

Poompuhar Shipping
Boat deck damage in kanyakumari

By

Published : May 22, 2020, 8:32 PM IST

கன்னியாகுமரியில் சர்வதேச சுற்றுலாத் தலமான விவேகானந்தர் நினைவு மண்டம், 133 அடி உயர திருவள்ளுவர் சிலை கடலின் நடுவே உள்ளதால், இங்கு சுற்றுலாவுக்கு வருபவர்கள் படகு மூலம் சென்று பார்க்காமல் செல்வதில்லை.

பார்வையிட செல்லும் சுற்றுலா பயணிகளுக்கு தமிழ்நாடு அரசின் பூம்புகார் கப்பல் போக்குவரத்துக் கழகம் சார்பில் பொதிகை, குகன், விவேகானந்தா ஆகிய மூன்று படகு போக்குவரத்து செயல்பட்டுவருகிறது.

கரோனா வைரஸ் ஊரடங்கு அமல்படுத்துவதற்கு முன்பாக மார்ச் 17ஆம் தேதி முதல் படகு போக்குவரத்து ரத்து செய்யப்பட்டது. இந்நிலையில் கடந்த இரண்டு நாட்களாக கன்னியாகுமரி பகுதியில் கடும் சூறைக்காற்று வீசி வருவதால், கடல் சீற்றம் ஏற்பட்டு ராட்சத அலைகள் எழுந்து வருகிறது.

இதில் பூம்புகார் கப்பல் போக்குவரத்துக் கழக படகுத்துறையில் படகுகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள கிழக்கு பக்க படகு தளத்தின் ஒரு பகுதி உடைந்து சேதமடைந்துள்ளது. இதனால் அந்த படகு தளத்தில் பூம்புகார் கப்பல் போக்குவரத்துக் கழகத்துக்கு சொந்தமான மூன்று படகுகளையும் நிறுத்தி வைப்பதில் சிரமம் ஏற்பட்டுள்ளது.

பூம்புகார் படகு தளம்

கரோனா வைரஸ் காரணமாக படகு போக்குவரத்து நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதால் அதிர்ஷ்டவசமாக சேதம் ஏற்படவில்லை.

இதையும் படிங்க:சாலையில் மரக்கிளை விழுந்து விபத்து; மனைவி உயிரிழப்பு, கணவனுக்கு சிகிச்சை!

ABOUT THE AUTHOR

...view details