குமரியில் உள்ள பகவதி அம்மன் கோயிலில் நவராத்திரி விழா கோலாகலமாக நடைபெற்றுவருகிறது. இங்குள்ள கொலு மண்டபத்தில் பகவதி அம்மன் எழுந்தருளி ஒன்பது நாட்களாகப் பக்தர்களுக்குக் காட்சியளித்துவருகிறார்.
நாள்தோறும் பல்வேறு மாநிலங்களிலிருந்தும், வெளி நாடுகளிலிருந்தும் குமரிக்கு வருகைதரும் சுற்றுலாப் பயணிகள் பகவதி அம்மன் கோயிலுக்கு வந்து சாமி தரிசனம் செய்கின்றனர். இந்நிலையில், நவராத்திரி விழாவின் பத்தாவது நாளான நாளை பகவதி அம்மன் கொலு மண்டபத்திலிருந்து எழுந்தருளி வரலாற்றுச் சிறப்புவாய்ந்த பரிவேட்டைத் திருவிழா நடைபெறும்.