தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

14ஆவது ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தை... உடனே அமல்படுத்த ஆர்ப்பாட்டம்! - undefined

கன்னியாகுமரி: தமிழ்நாடு அரசு போக்குவரத்து தொழிலாளர்களுக்கு 14ஆவது ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தையை உடனே முடித்து 30 விழுக்காடு ஊதிய உயர்வு வழங்கிட வலியுறுத்தி குமரி மாவட்ட பாரதிய மஸ்தூர் சங்கம் சார்பில் ராணி தோட்டம் பணிமனை முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

BMS transport protest

By

Published : Sep 28, 2019, 9:28 AM IST

தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழக தொழிலாளர்களுக்கு 14ஆவது ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தையை உடனே பேசி முடித்து 30 விழுக்காடு ஊதிய உயர்வு வழங்க வேண்டும். 2004ஆம் ஆண்டுக்குப் பின் பணியில் சேர்ந்த தொழிலாளர்களையும் ஓய்வூதிய திட்டத்தில் இணைக்க வேண்டும். 240 நாட்கள் பணி முடித்த ரிசர்வ் ஓட்டுநர், நடத்துநர்கள் பணி நிரந்தரம் செய்ய வேண்டும்.

14ஆவது ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தை... உடனே அமல்படுத்த ஆர்ப்பாட்டம்

சாலை பாதுகாப்பு மசோதா படி வேகக்கட்டுப்பாட்டு அடிப்படையில் பயண நேரம் மாற்றி அமைக்கக் கோரியும், ஓய்வு பெற்ற தொழிலாளர்களுக்கு 1.1.2016 முதல் வழங்கவேண்டிய டிஏ உயர்வு வழங்கிட வேண்டும் உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பாரதிய மஸ்தூர் சங்கம் சார்பில் நாகர்கோவில் ராணி தோட்டம் பணிமனை முன்பு நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details