கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவிலில் குடியுரிமை திருத்தச் சட்டத்தை விளக்க பாஜக சார்பில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. அக்கூட்டத்தில் பங்கேற்ற முன்னாள் மத்திய அமைச்சர் பொன். இராதாகிருஷ்ணன் பேசுகையில், "1955ஆம் ஆண்டில் நாடாளுமன்ற விவாதத்தில் குடியுரிமை திருத்தச் சட்டம் கேட்டு பேசியவர்கள் காங்கிரஸ்காரர்கள்" எனக் குறிப்பிட்டார்.
தொடர்ந்து பேசிய அவர், இஸ்லாமியர்கள் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக தலைகீழாக நின்று போராடினாலும் இந்தியாவின் ஒரு துளி நிலத்தைக் கூட, அசைக்க முடியாது எனவும்; அப்படியொரு நிலை ஏற்பட்டால் 1947ஆம் ஆண்டை விட மிக மோசமான சூழல் உருவாகும் எனவும் ஆவேசமாகப் பேசினார்.