கன்னியாகுமரி: குமரி மாவட்ட பாஜக பூத் கமிட்டி பொது கூட்டம் நாகர்கோவிலில் வடசேரி, வஞ்சி ஆதித்தன் புதுத்தெருவில் இன்று (ஜன.21) இரவு நடைபெற்றது. இதில், பாஜகவின் தமிழ்நாடு தேர்தல் பொறுப்பாளர் சி.டி.ரவி, மாநில துணை தலைவர் நயினார் நாகேந்திரன், முன்னாள் மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட மாநில மற்றும் மாவட்ட நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
பொது கூட்டத்தில் கலந்து கொண்ட தமிழ்நாடு பா.ஜ.க தலைவர் எல்.முருகன் பேசியதாவது, "இந்து மதத்தை கேவலப்படுத்திய, கந்தசஷ்டி கவசத்தை இழிவு படுத்திய கருப்பர் கூட்டத்தை பின்னால் இருந்து இயக்கியது திமுக தான்.