கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் பாரதிய ஜனதா, இந்துத்துவ அமைப்புகள் சார்பில் இந்திய குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு ஆதரவாக பிரமாண்டமான பேரணி நடந்தது.
நாகர்கோவில், சி.ஏ.ஏ.,வுக்கு ஆதரவாக பிரமாண்ட பேரணி - இந்திய குடியுரிமை திருத்தச் சட்டம்
கன்னியாகுமரி: இந்திய குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து நாகர்கோவிலில் பிரமாண்டமான பேரணி நடைபெற்றது. இந்தப் பேரணியில் இருபதாயிரத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.
பாஜக நடத்திய பிரம்மாண்ட பேரணி
நாகர்கோவில் பார்வதிபுரம் சந்திப்பிலிருந்து புறப்பட்ட இந்தப் பேரணி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வந்தடைந்தது. இந்த பேரணியில் பாரதிய ஜனதா கட்சியின் மேலிட பொறுப்பாளர் முரளிதரராவ், முன்னாள் மத்திய இணை அமைச்சர் பொண். ராதாகிருஷ்ணன் ஆகியோர் பேரணியின் முன்னே செல்ல, பல்லாயிரக்கணக்கான பாஜக தொண்டர்களும் இந்துத்துவா அமைப்புகளை சேர்ந்தவர்களும் பின் தொடர்ந்தனர்.
இதையும் படிங்க: சிஏஏவுக்கு எதிரான கூட்டத்தில் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் பங்கேற்பு!