கன்னியாகுமரி: குமரி மாவட்டத்தின் முக்கியமான சுற்றுலா தலங்களில் ஒன்று மாத்தூர் தொட்டிப்பாலம். அதன் கீழ்பகுதியில் கிறிஸ்தவ மலங்கரை கத்தோலிக்க ஆலய பங்குதந்தை தங்குவதற்கான விடுதி அமைப்பதற்காக கட்டடபணிகள் நடைபெற்று வந்தன.
இந்நிலையில் அந்த கட்டடத்தை, வழிபாட்டு இடமான குருசடியாக மாற்றம் செய்ய முயற்சித்ததையடுத்து, அனுமதியின்றி அமைக்கபட்ட குருசடியை அகற்றக்கோரி மாவட்ட நிர்வாகத்திடம் இந்து முன்னணி அமைப்பினர் மற்றும் பாஜாவினர் கடந்த சில தினங்களுக்கு முன்பு கோரிக்க வைத்தனர்.
இதனையடுத்து, முறையான அனுமதியின்றி அமைக்கபட்ட குருசடியை அகற்ற மாவட்ட நிர்வாகம் சார்பில் உத்தரவிடபட்டது. அதற்கு பின்பும் குருசடியை அகற்ற மலங்கரை கத்தோலிக்க நிர்வாத்தினர் முன்வராததையடுத்து, பாஜகவினர் மற்றும் இந்து அமைப்பினர் திருவட்டாரில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.