மத்திய அரசின் குடிநீர் வழங்கும் திட்டமான 'ஜல் ஜீவன்' திட்டத்தில் முறைகேடு நடப்பதாகக் கூறி கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள அனைத்து ஊராட்சி ஒன்றிய அலுவலகங்கள் முன்பு பாஜகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர்.
'ஜல் ஜீவன் திட்டத்தில் முறைகேடு' - குமரியில் பாஜகவினர் போராட்டம்! - jal jeevan plan
கன்னியாகுமரி: மத்திய அரசின் ஜல் ஜீவன் திட்டத்தில் முறைகேடு நடப்பதாகக் கூறி பெருமாள்புரம் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு பாஜகவினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பாஜக
அதன்படி, அகஸ்தீஸ்வரம் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பும் ஏராளமான பாஜகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்திற்கு பாஜக தேசிய செயற்குழு உறுப்பினர் எம்.ஆர். காந்தி தலைமை வகித்தார். இதில் நூற்றுக்கும் மேற்பட்ட பாஜகவினர் கலந்துகொண்டு கண்டன முழக்கங்களை எழுப்பினர்.