தமிழ்நாட்டில் நவம்பர் ஆறாம் தேதி திருத்தணியில் தொடங்கி டிசம்பர் ஆறாம் தேதிவரை திருச்செந்தூர் கோயில் வரையிலாக வேல் யாத்திரை நடத்தப்படும் என தமிழ்நாடு பாஜக தலைவர் எல். முருகன் அறிவித்தார். வேல் யாத்திரை நடத்தினால் மதக்கலவரம் ஏற்படும் என பல்வேறு அரசியல் கட்சியினர் எதிர்ப்புத் தெரிவித்தனர்.
இதையடுத்து வேல் யாத்திரைக்கு தமிழ்நாடு அரசு தடை விதித்தது. ஆனால் வேல் யாத்திரையை நடத்த அனுமதி வழங்கக் கோரி பல்வேறு மாவட்டங்களில் பாஜகவினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தடையை மீறி இன்று (நவ.6) சென்னையிலிருந்து பாஜக மாநிலத் தலைவர் எல். முருகன் வேல் யாத்திரையைத் தொடங்கினார். யாத்திரைக்கு அனுமதி மறுக்கப்பட்டு இருந்த நிலையில், பல்வேறு இடங்களில் பாஜகவினர் கைது செய்யப்பட்டனர். இதனைக் கண்டித்து திருப்பூர் புதிய பேருந்து நிலையம் அருகே பாஜகவினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
நாமக்கல்
நாமக்கல்லில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் முன்பு வேல் யாத்திரைக்கு தடை விதித்த தமிழ்நாடு அரசை கண்டித்து பாஜகவை சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்டோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். உடனே காவல் துறையினர் பாஜகவினரை கைது செய்து தனியார் திருமண மண்டபத்தில் அடைத்து வைத்தனர்.
கள்ளக்குறிச்சி