தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

குமரி வந்த தமிழ்நாடு பாஜக தலைவர் முருகனுக்கு சிறப்பான வரவேற்பு! - பாஜக தலைவர் முருகன்

பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக கன்னியாகுமரி மாவட்டத்திற்கு வருகை தந்த தமிழ்நாடு பாஜக தலைவர் முருகனுக்கு பாஜக சார்பில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.

குமரி வந்த தமிழ்நாடு பாஜக தலைவர் முருகன்
குமரி வந்த தமிழ்நாடு பாஜக தலைவர் முருகன்

By

Published : Sep 22, 2020, 12:45 AM IST

தமிழ்நாடு பாஜக மாநில தலைவர் எல்.முருகன், குமரி மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக வருகை தந்தார். இதற்காக நேற்று மாலை (செப். 21) ஆரல்வாய்மொழி முப்பந்தல் இசக்கியம்மன் கோயில் அருகே அவருக்கு பிரம்மாண்ட வரவேற்பு கொடுக்கப்பட்டது.

இந்த வரவேற்பு நிகழ்ச்சியில் கலந்துகொள்ள குமரி மாவட்டம் முழுவதும் 300க்கும் மேற்பட்ட வாகனத்தில் சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாஜக தொண்டர்கள் வந்தனர். தொடர்ந்து, இசக்கியம்மன் கோயிலில் சிறப்பு பூஜையில் கலந்து கொண்ட முருகன், பின்னர் நாகர்கோவிலுக்குச் சென்றார்.

குமரி வந்த தமிழ்நாடு பாஜக தலைவர் முருகன்

இந்நிகழ்ச்சிக்கு மாவட்ட தலைவர் தர்மராஜ் தலைமை வகித்தார். மாவட்ட பொதுச்செயலாளர்கள் சொக்கலிங்கம், வினோத், சுரேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் சிறப்பு விருந்தினராக முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், குமரி மண்டல பொறுப்பாளர் நயினார் நாகேந்திரன், அகில இந்திய பொதுக் குழு உறுப்பினர் எம்.ஆர்.காந்தி, மாநில செயலாளர் உமாரதி, குமரி மாவட்ட பொறுப்பாளர் ஜோதி ஆகியோர் கலந்து கொண்டனர்.

இதையும் படிங்க: தவறாக பரப்புரை செய்யும் எதிர்க்கட்சிகள் - தமிழ்நாடு பாஜக தலைவர் எல். முருகன்

ABOUT THE AUTHOR

...view details