தமிழ்க் கடவுள் முருகனையும் அவரது புகழைப் பாடும் கந்த சஷ்டி கவசம் என்ற பக்திப் பாடலையும்; கறுப்பர் கூட்டம் என்ற பெயரில் யூ-ட்யூப் தளத்தில் செயல்பட்டு வரும் அமைப்பானது மிகவும் இழிவாகவும், அருவருக்கத்தக்க வகையிலும் பேசியது.
இந்நிலையில் குமரி மாவட்ட பாஜக சார்பில், கறுப்பர் கூட்டம் யூ- ட்யூப் குழுவினரை தடை செய்யக் கோரியும், அதில் உள்ள அனைவரையும் கைது செய்ய வலியுறுத்தியும் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன.