கன்னியாகுமரி: கேரளா மாநிலம், ஆலப்புழா மாவட்டத்தில் ஹரிப்பாடு பகுதியில் 1500-க்கும் மேற்பட்ட வாத்துகள் உயிரிழந்ததை தொடர்ந்து நடத்த பரிசோதனைகளில் 'பறவை காய்ச்சல்' பாதிப்பு என உறுதி செய்யப்பட்டது. இதைத்தொடர்த்து, தமிழ்நாட்டில் பறவை காய்ச்சல் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தமிழ்நாடு கால்நடை துறையினர் தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர்.
அதன் ஒருபகுதியாக, தமிழ்நாடு-கேரளா எல்லையான படந்தாலுமூடு, கொல்லங்கோடு, களியக்காவிளை பகுதிகளில் கால்நடை பராமரிப்பு துறை சார்பில் சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டு தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
பறவை காய்ச்சல் எதிரொலி - கேரளாவிலிருந்து வரும் வாகனங்களில் கிருமி நாசினி தெளிக்கும் பணி இதேபோல் கேரளாவிலிருந்து கோழிகள், முட்டைகளை ஏற்றி வரும் வாகனங்களை திருப்பி அனுப்பியும் கேரளாவிலிருந்து வரும் வாகனங்களில் கிருமி நாசினி தெளிக்கபட்டு தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டும் வருகின்றனர்.
மேலும், மாவட்டம் முழுவதும் கால்நடைத்துறை சார்பில் உதவி மருத்துவர்கள் தலைமையில் 9 ஒன்றியங்களில் 27 குழுக்கள் அமைக்கபட்டு தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
இதையும் படிங்க: 'கடலைப் பார்த்தாலே பயமாக உள்ளது...' தாக்குதலுக்குள்ளான மயிலாடுதுறை மீனவர்கள் வேதனை