கன்னியாகுமரி கடற்கரை சாலையில் பயோ வாட்ச் நிறுவனம் சார்பில் பாதுகாக்கப்பட்ட அரியவகை உயிரினங்கள் அருங்காட்சியகம் திறக்கப்பட்டது. இதில், கடல் பஞ்சு, கடல் அனிமோன், நாடாப்புழு, உருண்டைப்புழு, ஓரள், ஆக்டோபஸ், நட்சத்திர மீன், இலைப்பூச்சி, நாய்மீன், குழித்தவளை, மரத்தவளை, அரணை யூக்கா உள்ளிட்ட வகைகளின் பதப்படுத்தப்பட்ட உடல்கள், எலும்புக் கூடுகள் மற்றும் அரியவகை பறவைகளின் முட்டைகள் இடம் பெற்றன.
அரிய வகை உயிரினங்கள் அருங்காட்சியகம் திறப்பு! - open
கன்னியாகுமரி: கடற்கரை சாலையில் பயோ வாட்ச் நிறுவனம் சார்பில் பதப்படுத்தப்பட்ட அரிய வகை உயிரினங்கள் அருங்காட்சியகம் திறக்கப்பட்டது.
கண்காட்சியகம்
திறப்பு விழாவிற்கு பயோ வாட்ச் நிர்வாக இயக்குநர் நாராயணன் நம்பூதி பாடு தலைமை வகித்தார். அதிமுக மாவட்ட செயலாளர் எஸ்.ஏ.அசோகன் கண்காட்சியகத்தை திறந்து வைத்து அருங்காட்சியகத்தை பார்வையிட்டார். இந்நிகழ்வில், மாநில அதிமுக இலக்கிய அணி இணைச் செயலர் கவிஞர் டி.சதாசிவம் ஆகியோர் கலந்துகொண்டனர்.
Last Updated : May 25, 2019, 11:49 PM IST