கன்னியாகுமரி மாவட்டம் அஞ்சுகிராமத்தை அடுத்த ஸ்ரீ லட்சுமிபுரத்தை சேர்ந்தவர் ஐயப்பன், இவரது மகன் சிவா என்ற பரமசிவன் (20), அதே ஊரைச் சேர்ந்த வின்சென்ட் மகன் வினிஸ்ராஜ்(20) இருவரும் தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வருகின்றனர். நண்பர்களான இவர்கள் இன்று பைக்கில் கன்னியாகுமரி சென்று சுற்றிப் பார்த்துவிட்டு நான்கு வழி சாலையில் வீடு திரும்பிக் கொண்டிருந்தனர்.அப்போது நான்கு வழிச்சாலையில் பைக்கை வினிஸ்ராஜ் அதிவேகமாக ஓட்டி வந்துள்ளார்.
பாலத்தின் தடுப்பு சுவரில் பைக் மோதி விபத்து - ஒருவர் பலி
கன்னியாகுமரி: இரு சக்கர வாகனத்தில் வந்த தனியார் பாலிடெக்னிக் கல்லூரி மாணவர்கள் விபத்தில் சிக்கியதில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
சிவா என்ற பரமசிவம்
அப்போது தீடீரென நிலைதடுமாறி சாலையோரத்தில் இருந்த இரும்பு தடுப்பு வேலியில் பைக் மோதியது. இதில் இருவரும் 25 அடி தூரம் தூக்கி வீசப்பட்டனர். சிவா என்ற பரமசிவம் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். உயிருக்கு போராடிய வினிஸ்ராஜை அப்பகுதி மக்கள் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்து குறித்து கன்னியாகுமரி காவலர் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று ஆய்வு செய்து வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.