கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை அருகே பரைக்கோடு பகுதியில் மரியதாஸ் என்பவருக்குச் சொந்தமான சூப்பர் மார்க்கெட் அமைந்துள்ளது. இங்கு பணியாற்றிவரும் விக்டர் என்பவர் நேற்று பணி முடித்து வீடு திரும்பும்போது மழை பெய்துகொண்டிருந்ததால், கடை முன்பு தனது சைக்கிளை நிறுத்திவிட்டு வீட்டிற்கு வேறு வாகனத்தில் சென்றுள்ளார்.
இந்நிலையில் விக்டர் இன்று காலை கடைக்குச் சென்று பார்த்தபோது, அங்கு நிறுத்தப்பட்டிருந்த சைக்கிள் இல்லாததைக் கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார். உடனே, கடையில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வுசெய்தபோது, நள்ளிரவில் அடையாளம் தெரியாத நபர் சைக்கிளைத் திருடிச் சென்றது தெரியவந்தது.