தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

பல்வேறு கோரிக்கைளை வலியுறுத்தி பாரதிய மஸ்தூர் சங்கம் போராட்டம்! - இஎஸ்ஐ மற்றும் பிஎப் திட்டம்

கன்னியாகுமரி: குமரி மாவட்ட பாரதிய மஸ்தூர் சங்கம் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

Bharatiya Mastur Sangam protests by emphasizing various demands!
Bharatiya Mastur Sangam protests by emphasizing various demands!

By

Published : Jul 29, 2020, 8:07 PM IST

அனைத்து அமைப்பு சாரா தொழிலாளர் நல வாரியங்களில் பதிவாகியுள்ள தொழிலாளர்களுக்கு இஎஸ்ஐ மற்றும் பிஎப் திட்டத்தை அமல்படுத்த வலியுறுத்தி கன்னியாகுமரி பாரதிய மஸ்தூர் சங்கம் சார்பில், மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

அப்போது, “மத்திய, மாநில அரசு நிறுவனங்களிடமிருந்து செஸ் வரி பிடித்தம் செய்து அமைப்புசாரா தொழிலாளர் நல வாரிய உறுப்பினர்களுக்கு தடையில்லாமல் பணப்பயன்கள் கிடைத்திட செய்ய வேண்டும். கரோனா பாதிப்பால் தங்கள் வாழ்வாதாரத்தை இழந்து உள்ள ஆட்டோ, சுற்றுலா வாகனங்களுக்கு சாலை மற்றும் இன்சூரன்ஸ் கட்டணத்தை ரத்து செய்ய வேண்டும்.

கட்டுமானம், ஆட்டோ, நகை, முடிதிருத்துவோர், சலவைத் தொழிலாளர் உள்ளிட்ட அனைத்து அமைப்பு சாரா தொழிலாளர் நல வாரியங்களில் பதிவாகியுள்ள தொழிலாளர்களுக்கு இஎஸ்ஐ மற்றும் பிஎப் திட்டத்தை அமல்படுத்த வேண்டும்.

அனைத்து அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கும் அரசு அறிவித்துள்ள ஊரடங்கு காலத்திற்கான உதவித்தொகை 2000 வழங்கப்படுவதை அலுவலர்கள் உறுதிசெய்ய வேண்டும்.” உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் கோஷங்கள் எழுப்பினர்.

ABOUT THE AUTHOR

...view details