தமிழகத்தின் பிரசித்தி பெற்ற கோயில்களில் ஒன்றான கன்னியாகுமரி பகவதி அம்மன் கோயிலில் வைகாசி விசாக திருவிழா மே 9ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. 11 நாட்கள் நடைபெறும் இத்திருவிழாவானது, ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு கலைநிகழ்ச்சிகளும், சொற்பொழிவுகளும் நடைபெற்றன.
பகவதி அம்மன் கோயில் திருவிழா: சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி - கன்னியாகுமரி
நாகர்கோவில்: கன்னியாகுமரி பகவதி அம்மன் கோயிலில் வைகாசி விசாக பெருவிழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது.
File pic
இதில் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகமும், தொடர்ந்து சிறப்பு பூஜைகளும் நடைபெற்றன. கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த பல்வேறு அமைப்புகளிலிருந்தும் வந்திருந்த மாணவ மாணவிகள் கலந்துகொண்ட பரதநாட்டிய நிகழ்ச்சியும் கோயில் அரங்கத்தில் நடைபெற்றது. இந்த திருவிழாவை சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சியுடன் கண்டு ரசித்தனர்.