தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்தத்தால் பல கோடி வர்த்தகம் பாதிப்பு

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நாடு தழுவிய அளவில் வங்கி ஊழியர்கள் நடத்திய வேலை நிறுத்தப் போராட்டத்தால் பல கோடி ரூபாய் வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளது.

By

Published : Feb 1, 2020, 2:54 PM IST

வங்கி ஊழியர்கள்  வேலைநிறுத்தம் பல கோடி ரூபாய் வர்த்தகம் பாதிப்பு
வங்கி ஊழியர்கள் வேலைநிறுத்தம் பல கோடி ரூபாய் வர்த்தகம் பாதிப்பு

வங்கி ஊழியர் சங்கத்தினர் மத்திய அரசிடம் ஊதிய உயர்வு, புதிய ஓய்வு ஊதியம் ரத்து உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வந்தனர்.

இதற்காக நடத்தபட்ட பேச்சுவார்தைகள் உடன்பாடு எற்படாதநிலையில் வங்கி ஊழியர் சங்கத்தினர் போராட்டங்களை அறிவித்தனர்.

அதில் முதற்கட்டமாக நாடு முழுவதும் அனைத்து வங்கிகளும் இன்றும் நாளையும் இரண்டு நாட்கள் வேலை நிறுத்த போராட்டத்தை அறிவித்து இன்று போராட்டம் நாடு தழுவிய அளவில் தொடங்கியது.

கன்னியாகுமரி :

கன்னியாகுமரி மாவட்டத்தில் வங்கிகள் இரண்டு நாள்கள் வேலை நிறுத்த போராட்டம் இன்று தொடங்கியது. நாகர்கோவிலில் உள்ள ஐ,ஒ.பி. வங்கி முன் வங்கி ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

இதில் கன்னியாகுமரி மாவட்டம் முழுவதும் 264 வங்கிகள் உள்ளன. அங்கு பணியாற்றும் ஆயிரத்து 400 வங்கி ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இதனால் நாள் ஒன்றுக்கு 300 கோடி ரூபாய் பண பரிவர்த்தனை பாதிக்கப்பட்டுள்ளதாக வங்கி ஊழியர் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.

திருப்பூர் :

இதேபோன்று திருப்பூர் மாவட்டத்தில் உள்ள 353 வங்கிக் கிளைகள் இன்று வேலை நிறுத்தத்தில் ஈடுபடுகிறது. இதில் சுமார் ஆயிரத்து 500-க்கும் மேற்பட்ட வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

திருப்பூர் டவுன்ஹால் அருகில் உள்ள ஆந்திரா வங்கி முன்பு நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் சுமார் நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.

வங்கி ஊழியர்கள் வேலைநிறுத்தம் பல கோடி ரூபாய் வர்த்தகம் பாதிப்பு

இந்த வேலைநிறுத்தப் போராட்டத்தின் காரணமாக திருப்பூர் மாவட்டத்தில் சுமார் ஆயிரம் கோடி ரூபாய் வரை பண பரிவர்த்தனை பாதிப்பு ஏற்படும் என வங்கி ஊழியர்கள் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.

இதையும் படிங்க :சென்னை இளம்பெண்ணுக்கு கொரோனா வைரஸ் அறிகுறி!

ABOUT THE AUTHOR

...view details