தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

குமரியிலிருந்து பெங்களூருவிற்கு நாளை முதல் சிறப்பு ரயில் இயக்கம் - பண்டிகை காலத்தை முன்னிட்டு சிறப்பு ரயில் இயக்கம்

குமரி: கன்னியாகுமரி மாவட்டத்திலிருந்து பெங்களூருவிற்கு விழாக்காலத்தை முன்னிட்டு நாளை முதல் சிறப்பு ரயில் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

Bangalore -kanyakumari special train starts from tomorrow
Bangalore -kanyakumari special train starts from tomorrow

By

Published : Oct 22, 2020, 11:26 AM IST

பண்டிகை காலத்தை முன்னிட்டு தமிழ்நாட்டிலிருந்து கர்நாடக மாநிலத்திற்கு வரும் 23ஆம் தேதி முதல் 6 சிறப்புக் குளிர்சாதனப் பெட்டி ரயில்கள் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

கே.எஸ்.ஆர் பெங்களூரு ரயில் நிலையம் முதல் கன்னியாகுமரி வரை இயக்கப்படவுள்ள சிறப்பு ரயிலுக்கான முன்பதிவு நேற்று தொடங்கியுள்ள நிலையில், நாளை முதல் ரயில் சேவைகள் தொடங்கும் என தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக தெற்கு ரயில்வே திருவனந்தபுரம் கோட்டம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், "பயணிகளிள் வசதிக்காக பெங்களூரு மற்றும் கன்னியாகுமரி இடையே முழுமையாக முன்பதிவு செய்யப்பட்ட ரயில் நாளை (அக்டோபர் 23ஆம் தேதி) முதல் விழாக்கால சிறப்பு ரயிலாக இயக்கப்படுகிறது.

அதன்படி ரயில் எண் 06526 பெங்களூரு-கன்னியாகுமரி வழித்தடத்தில் பெங்களூருவிலிருந்து அக்டோபர் 23ஆம் தேதி முதல் நவம்பர் 30ஆம் தேதிவரை தினசரி இரவு எட்டு மணிக்கு புறப்படும்.

மறுமார்க்கத்தில் ரயில் எண் 06525 கன்னியாகுமரி-பெங்களூரு தினசரி விழாக்கால சிறப்பு ரயில் அக்டோபர் 25ஆம் தேதி முதல் டிசம்பர் 2ஆம் தேதிவரை தினமும் காலை 10 மணிக்கு கன்னியாகுமரியில் இருந்து புறப்படும்" என அதில் கூறப்பட்டுள்ளது.

இதையும் படிங்க:சென்னை-பெங்களூரு இடையே 6 சிறப்பு ரயில்கள்... நாளை முதல் முன்பதிவு

ABOUT THE AUTHOR

...view details